வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் தங்கள் வாழ்க்கையில் செழிப்பதற்கான புதிய திட்டங்கள் எதுவும் இல்லை – டிடிவி தினகரன்

வேளாண்மை பட்ஜெட், விவசாயிகளை மேலும் வேதனையின் விளிம்பிற்குத் தள்ளும் வகையில்தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார். 

நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  அவர்கள், தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தோளில் பச்சை துண்டு அணிந்து வந்து வேளாண் பட்ஜெட்டை வாசித்தார்.

டிடிவி தினகரன் அறிக்கை 

இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் விவசாயம் குறித்து பல புதிய அறிவிப்புகள் வெளியானது. இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘திமுக அரசு மூன்றாவது முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண்மை பட்ஜெட், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முழுமையடையச் செய்வதாக இல்லாமல் அவர்களை மேலும் வேதனையின் விளிம்பிற்குத் தள்ளும் வகையில்தான் இருக்கிறது.’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment