”அக்னிபத்’ திட்டம்” – டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு.

அக்னிபத் திட்டம்:

agnipath27

முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு:

agni27

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி இருந்தனர். குறிப்பாக பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள், வன்முறையும் அரங்கேறியது. இதனைத்தொடர்ந்து, இந்த திட்டத்திற்கு எதிராக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டது.

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக வழக்கு:

supremecourtcentralgovt

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும், டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அக்னிபத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும், டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அந்தவகையில், இதுதொடர்பான வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

மனு தள்ளுபடி:

இந்த நிலையில், ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் ”அக்னிபத்’ திட்டத்தை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முப்படையில் அக்னிபத் வீரர்களை சேர்க்கும் திட்டத்துக்கு எதிரான மனுவை தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது.

dhc27

அக்னிபத் திட்டம் தேசிய முக்கியத்துவத்தை முன்வைத்து கொண்டுவரப்பட்டதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட எந்த ஒரு காரணத்தையும் கண்டறிய இயலவில்லை எனவும் கூறியுள்ளனர்.

Leave a Comment