அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி!

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி -5 ஏவுகணை சோதனை வெற்றி.

ஒடிசாவில் உள்ள பாலசோர் கடற்கரை அருகே அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அணு ஆயுதங்களை தாங்கி சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் அக்னி-5 ஏவுகணை. 5,000 கிமீ தூரம் வரை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட அக்னி-5 ஏவுகணை.

கடந்த 1989-ம் ஆண்டில் அக்னி 1 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதன்பின், அக்னி 2, 3, 4, 5 ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன. கடந்த 2012, 2013, 2015-ம் ஆண்டுகளில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இந்த நிலையில், ஒடிசாவில் நேற்றிரவு மீண்டும் அக்னி 5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் அக்னி 5 ஏவுகணை 5,500 கி.மீ. தொலைவு சீறிப் பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கி தகர்த்தது. 17.5 மீட்டர் நீளம், 2 மீட்டர் விட்டம் கொண்ட அக்னி 5 ஏவுகணை 50,000 கிலோ எடை கொண்டதாகும். மணிக்கு 29,401 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும். 1,100 கிலோ எடை வரையிலான அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment