இந்த பெண் யார் என்றே தெரியாது.! பாலியல் குற்ற வழக்கு தீர்ப்பு குறித்து டிரம்ப் கடும் விமர்சனம்.!

பாலியல் வழக்கில் டிரம்பிற்கு எதிராக தீர்ப்பு வெளியானதும், புகார் அளித்த பெண் யார் என்றே எனக்கு தெரியாது என மறுத்துள்ளார். 

கடந்த 1990 களில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், ஜீன் கரோல் என்பவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறி, அவர்மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை அறிக்கையில், டிரம்ப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, டிரம்பிற்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நீதிமன்ற தீர்ப்பு குறித்து, முன்னாள் அதிபர் டிரம்ப் கூறுகையில், இந்த தீர்ப்பு ஒரு அவமானம். எல்லா காலத்திலும் நடைபெறும் மிகப்பெரிய சூழ்ச்சியின் தொடர்ச்சியே இந்த தீர்ப்பு. இந்தப் பெண் (ஜீன் கரோல்) யார் என்றே எனக்கு முற்றிலும் தெரியாது எனவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். 

2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இந்த நீதிமன்ற தீர்ப்பு ஓர் தடையாக இருக்காது எனவும். இது கிரிமினல் குற்றம் இல்லை என்றும், இதற்கு அபராதம் மட்டுமே வசூலித்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் கீழ் சிறை செல்லும் நிலை எதுவும் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.