ஆப்கானிஸ்தான் வெடிகுண்டு விபத்து..! பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு..!

ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதிக்கு அருகே நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு.

வடக்கு ஆப்கானிஸ்தானின் படாக்ஷான் மாகாணத்தில் உள்ள நபாவி மசூதிக்கு அருகே நேற்று இரவு நடந்த வெடிகுண்டு விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், தற்பொழுது பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. படாக்ஷான் மாகாணத்தில் தலிபான் முன்னாள் துணை ஆளுநரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றுள்ளது.

அப்பொழுது இந்த வெடி விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வெடி விபத்தில் முன்னாள் தலிபான் காவல்துறை அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் நஃபி தாகோர் கூறியிருந்தார்.

இந்நிலையில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ஹமித் கர்சாய் நபாவி மசூதிக்கு அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹமீத் கர்சாய், இந்த சம்பவத்தை ஒரு பயங்கரவாத செயல் என்றும், அனைத்து மனித மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல் என்றும், இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொர்க்கமும், அவர்களின் குடும்பங்களுக்கு பொறுமையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனைப் பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.