வெற்றி முகத்தில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன்.! டெபாசிட் வாங்குவாரா கே.எஸ்.தென்னரசு.?

அதிமுக வேட்பாளர் தென்னரசு இதுவரையில் 19 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.  டெபாசிட் தொகை பெறுவதற்கு 28,500 வாக்குகள் பெற வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.  

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஏறக்குறைய வெற்றியின் விளிம்பில் திமுக கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களமிறங்கிய இ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருக்கிறார் என்றே கூற வேண்டும். இதில் ஆரம்பம் முதலே, தபால் வாக்குகள் எண்ணிக்கை முதலே இளங்கோவன் தான் முன்னிலை பெற்று வருகிறார்.

வாக்கு வித்தியாசம் : அதே போல, அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஆரம்பம் முதலே, இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அதே போல வாக்கு வித்தியாசம் என்பது நீண்டு கொண்டே போகிறது. இதனால் அதிமுக வேட்பாளர் டெபாசிட் வாங்குவாரா என்று அதிமுகவினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

டெபாசிட் தொகை : மாநில அளவிலான சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் தொகையாக தேர்தல் அலுவலகத்துக்கு கட்ட வேண்டும். இந்த  வைப்பு தொகையானது தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில் 6இல் 1 பங்கு வாக்கை (16.67 சதவீதம்) வேட்பாளர் பெற்று விட்டால் அந்த தொகை திருப்பி தரப்படும். இது தேவையின்றி யாரேனும் தேர்தலில் நிற்பதை தடுக்க இந்த டெபாசிட் தொகை கட்டும் முறை நடைமுறையில் உள்ளது.

தென்னரசு நிலை.? : அதே போல தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 1,70,192 ஆகும். இதில் டெபாசிட் வாங்குவதற்கு 28,423 வாக்குகள் பெற வேண்டும். இதுவரையில், 19,936 வாக்குகள் பெற்றுள்ளார். இன்னும் சுமார் 10 ஆயிரம்  வாக்குகள் பெற வேண்டிய சூழல் நிலவுகிறது. அவர் டெபாசிட் வாங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment