தொடர்ந்து வீழ்ச்சியை சந்திக்கும் அதானி குழுமம் – வங்கிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த ரிசர்வ் வங்கி..!

அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

அதானி குழுமம் பல வருடங்களாக பங்குகளை கையாளுதல் மற்றும் கணக்கியல் (அக்கவுண்ட்ஸ்) மோசடியில் பங்கேற்றுள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம்  ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வந்தது.

adani20000

இந்த நிலையில், அதானி குழுமம் பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் இருந்து 15வது இடத்திற்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி. அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் சுமார் ரூ. 8 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது.

இதனையடுத்து, இப்போதுள்ள சூழலில் பங்கு விற்பனையை தொடர்வது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது. என்னை பொறுத்தவரை முதலீட்டாளர்களின் நலனுக்குக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன். இழப்புகளில் இருந்து அவர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளோம் என கவுதம் அம்பானி தெரிவித்துள்ளார்.

adanidown

கவுதம் அம்பானி பங்கு விற்பனை ரத்து செய்யும் முடிவை எடுத்ததையடுத்து, அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment