பிரமாண்டமாக நடைபெறும் நடிகை ராதா மகள் கார்த்திகா திருமணம்! எப்போது தெரியுமா?

80ஸ் காலகட்டத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ், என பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராதா. இவருடைய மகள் தான் கார்த்திகா. இவர் தமிழ் சினிமாவில் ஜீவாவுக்கு ஜோடியாக கோ படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர்.

கோ திரைப்படத்தை தொடர்ந்து நடிகை கார்த்திகா அடுத்ததாக ஆர்யாவுக்கு ஜோடியாக ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ எனும் படத்திலும் நடித்திருந்தார். பிறகு பட வாய்ப்புகள் பெரிதளவில் வராத காரணத்தால் சினிமாவை விட்டு விலகி தற்போது திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகவிருக்கிறார். கார்த்திகாவிற்கு வரும் ஞாயற்றுகிழமை பிரமாண்டமாக திருமணம் நடைபெறவிருக்கிறதாம்.

கடந்த அக்டோபர் மாதம் கார்த்திகாவுக்கு எளிமையான முறையில் நிச்சியதார்த்தம் நடைபெற்றது. இதனை அதிகாரப்பூர்வமாக நடிகை கார்த்திகாகவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் இருந்தார். இதனையடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளதாம். ராதாவுக்கு திருவனந்தபுரத்தில் பிரமாண்டமான ஒரு திருமணம் மண்டபம் இருக்கிறதாம்.

மீண்டும் கவர்ச்சி குத்தாட்டம் போட ரெடியான சமந்தா! எந்த படத்துக்காக தெரியுமா?

அங்கு வைத்து திருமணத்தை நடத்தினால் சரியாக இருக்கும் என்பதால் அங்கு திருமணத்தை நடத்த நடிகை ராதா திட்டமிட்டு இருக்கிறாராம். கல்யாணம் முடிந்த பிறகு வரவேற்பு நிகழ்ச்சி கோவளம் கடகரையில் நடைபெறவிருக்கிறதாம். ஏனென்றால், ராதாவின் உண்மையான பெயர் உதயசந்திராவாம். அதே பெயரில் கோவளம் கடகரையில் ஹோட்டல் ஒன்றும் இருக்கிறதாம்.

எனவே, கார்த்திகாவுக்கு திருமணம் முடிந்த பிறகு அவருடைய வரவேற்பு நிகழ்ச்சி அந்த உதயசந்திரா ஹோட்டலில் தான் நடைபெறவிருக்கிறதாம். விரைவில் தன்னுடைய மகளுக்கு திருமணம் என்ற செய்தியை நடிகை ராதாவே அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திகாவுக்கு திருமணம் என்ற செய்தி வெளியாகி இருக்கும் நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க தொடங்கிவிட்டனர்.

கார்த்திகா திருமணம் செய்துகொள்ளவிருக்கும் நபரின் விவரங்கள் மற்றும் அவருடைய முகம் கூட வெளியே தெரியவில்லை. திருமணம் முடிந்த பிறகே அவருடைய முகம் அவர் என்ன வேலை செய்கிறார் என்பது தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.