#Breaking:தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் மேலும் குறைவு – போக்குவரத்துத்துறை!

தமிழகத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 32% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல்.

நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.

வேலை நிறுத்தம் எதனால்?:

விலைவாசி உயர்வு கட்டுப்பாடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்,பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும்,பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ,ஏஐடியூசி,யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.மேலும், வங்கி,எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

எவ்வளவு பேருந்துகள் ஓடவில்லை?:

இதன்காரணமாக,தமிழகத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 67% பேருந்துகள் ஓடவில்லை என்றும்,33%(5,023) பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்தது.குறிப்பாக,சென்னையில் 3175 பேருந்துகளில் 318 பேருந்துகள்(10.02%) மட்டுமே இயக்கப்படுகின்றன என்று தகவல் வெளியாகியிருந்தது.

பேருந்துகள் இயக்கம் குறைவு:

இந்நிலையில்,தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயக்கம் மேலும் குறைந்துள்ளது.அதாவது,காலை 11 மணி நிலவரப்படி 32% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பயணிகள் சிரமம்:

இந்த பொது வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் பள்ளி,கல்லூரி மாணவர்கள்,வேலைக்கு செல்பவர்கள் என பலர் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி,கல்லூரி,அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Recent Posts

பின்னணி பாடகர் வேல்முருகன் கைது! காரணம் என்ன?

Velmurugan : சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரியை தாக்கிய புகாரில் பாடகர் வேல்முருகன் கைது.  தமிழ் சினிமாவில் பல ஹிட் படைகளை பாடி இருக்கும் பிரபலமான…

1 hour ago

அடித்து நொறுக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்.. ஆந்திரா தேர்தலில் பரபரப்பு.!

Election2024 : ஆந்திர மாநிலத்தில் சித்தூர் வாக்குச்சாவடியில் இரு கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாக்கு இயந்திரங்கள் உடைக்கப்பட்டன. இன்று (மே 13) 4ஆம் கட்ட மக்களவை…

2 hours ago

மணிரத்னம் மனுஷனே இல்லை! ஆதங்கத்தை கொட்டிய தயாரிப்பாளர்!

Mani Ratnam : மணிரத்னம் மனுஷனே இல்லை என பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். சினிமாத்துறையில் இருக்கும் பிரபலங்களை பற்றி மற்ற பிரபலங்கள்…

2 hours ago

4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் ..! 9 மணி நிலவரம் இதுதான் !

Lok Sabha Election 2024 : மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்றைய தினம் (13-05-2024) நான்காம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.…

2 hours ago

13 விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.!

Bomb Threats : இந்தியா முழுக்க13 விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஜெய்ப்பூர், பீகார் , ஜம்மு காஷ்மீர்…

2 hours ago

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

Weather Update :  தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயில் பல மாவட்டங்களில் கொளுத்தி வரும்…

3 hours ago