தேசிய பாதுகாப்பு ஆவணங்களை மறைத்த டிரம்ப்.? நேரில் ஆஜராக அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.!

தேசிய பாதுகாப்பு ஆவணங்களை மறைத்த புகாரின் பேரில் டிரம்பிற்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியில் இருந்த போது தேசிய பாதுகாப்பு அரசு ஆவணங்களை சட்ட விரோதமாக வைத்திருந்ததாகவும், அவர் தேர்தலில் தோற்று ஜனாதிபதி மாளிகையை விட்டு செல்கையில் அந்த தேசிய பாதுகாப்பு ஆவணங்களை கொண்டு சென்றதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு அந்த விசாரணை ஒரு வருடமாக அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த புகாரின்மீது விசாரணை நடத்துவதற்காக அதிபர் டொனால்டு டிரம்ப்பிறகு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அதில் வரும் செவ்வாய் கிழமை டிரம்ப் நேரில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த டொனால்டு டிரம்ப் தரப்பு இன்று அமெரிக்கவுக்கு மேலும் ஒரு கருப்பு தினம் என விமர்சித்து உள்ளனர்.

மேற்கண்ட இந்த குற்றச்சாட்டின் கீழ் டிரம்ப் மீது 7 கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. டொனால்டு டிரம்ப் மீது ஏற்கனவே ஒரு பாலியல் குற்றசாட்டு உள்ளிட்ட வழக்குகள் இருந்ததும், அவர் அடுத்து வரவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்ததும் குறிப்பிடதக்கது.