SAvsAFG: உமர்சாய் அதிரடி அரைசதம்..! தென்னாப்பிரிக்காவிற்கு 245 ரன்கள் இலக்கு.!

SAvsAFG: உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று 42 வது லீக் போட்டியானது, அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதி வருகிறது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதன்படி, ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். ஆரம்பத்தில் வேகமாக ரன்கள் எடுக்கத் தொடங்கினாலும், தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சில் வேகம் படிப்படியாகக் குறைந்தது. குர்பாஸ், மகாராஜ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

ஐசிசி சிறந்த வீரர்களுக்கான விருதை தட்டி சென்ற ரச்சின் ரவீந்திரா, ஹேலி மேத்யூஸ்..!

அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களிலேயே இப்ராஹிம் சத்ரானும் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அவரையடுத்து ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி களமிறங்கி விளையாட, ஷாஹிதி வந்த வேகத்தில் வெளியேறினார். ரஹ்மத் ஷா நிதானமாக விளையாட, அஸ்மத்துல்லா உமர்சாய் களமிறங்கி அதிரடி காட்டினார்.

ரஹ்மத் ஷா 26 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்துக் களமிறங்கிய இக்ராம் அலிகில், முகமது நபி, ரஷீத் கான் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இதற்கிடையில் அஸ்மத்துல்லா உமர்சாய் அரைசதம் அடித்து விளாசினார். பின் நூர் அகமத் களமிறங்கி 26 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து உமர்சாய் பொறுப்பாக விளையாடி 90 ரன்களைத் தாண்டினார். இறுதியில் முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடித்தது. முடிவில், ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது.

நாளை கடைசி போட்டி.. அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது – பாபர் அசாம்..!

இதில் அதிகபட்சமாக அஸ்மத்துல்லா உமர்சாய் 97* ரன்களும், ரஹ்மத் ஷா 26 மற்றும் நூர் அகமத் 26 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணியில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளையும், லுங்கி என்கிடி மற்றும் கேசவ் மகாராஜ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க வகையில் டீ காக் கேட்ச்சில் 6 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன. இப்போது 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கவுள்ளது.