இந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்..! அதிர்ச்சியில் மக்கள்..

இந்தோனேசியாவில் இன்று இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்தோனேசியாவின் கெபுலாவான் பதுவில் அடுத்தடுத்துத் தொடர்ச்சியாக இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

இதில் கெபுலாவான் பதுவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.1 ரிக்டர் ஆகவும், அதைத் தொடர்ந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு மற்றொரு நிலநடுக்கம் 5.8 ரிக்டர் ஆகவும் பதிவாகியுள்ளது. முதல் நிலநடுக்கம் 43 கிமீ (26.72 மைல்) ஆழத்திலும், இரண்டாவது 40 கிமீ (24.85 மைல்) ஆழத்திலும் ஏற்பட்டதாக இஎம்எஸ்சி தெரிவித்துள்ளது.

இந்த தொடர் நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் உயிர்ச்சேதம் மற்றும் பொருள்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Leave a Comment