பிப்ரவரி 14 ‘பசு கட்டிப்பிடிப்பு தினம்’ இல்லை..! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

இந்திய விலங்குகள் நல வாரியம் கூறியிருந்த பிப்ரவரி 14 பசு கட்டிப்பிடிப்பு தினமானது திரும்ப பெறப்படுவதாக அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. 

வரும் பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் காதலர் தினமானது கொண்டாடப்பட உள்ளது. அதற்கு இளம் காதலர்கள் முதல் முதுமை காதலர்கள் வரை அனைவரும் அதனை கொண்டாட தயாராகி வருகின்றனர். அதே நேரம் இந்தியாவில்  இந்திய விலங்குகள் நல வாரிய அமைப்பானது, வரும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அரவணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டது.

பசு கட்டிப்பிடிக்கும் தினம் : இது குறித்து, வெளியான அறிக்கையில், இந்திய மேற்கத்திய நாட்டு கலாசாரத்தால் வேதகால பண்பாடு அழிந்து வருவாதாகவும், நம் கலாசாரம் பண்பாடு மறக்கக்கடிக்கப்பட்டு விட்டதாகவும், கூறி, பசுக்கள் ஏராளமான பலன்களைத் தருகிறது எனவே அன்றைய தினம் பசுவை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வேண்டும் எனவும், அதன் மூலம், மன ரீதியான வளம் அதிகரிக்கும் எனவும், ஆதலால், பிப்ரவரி 14ஆம் தேதியை பசு கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாடுங்கள். என கூறப்பட்டு இருந்தது.

இணையத்தில் பரவிய மீம்ஸ் : இந்த அறிக்கையானது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பாக, நெட்டிசன்கள் பசு அரவணைப்பு தினத்தை வைத்து, அதனை கிண்டல் செய்து வீடியோ, மீம்ஸ் என இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  இந்த எதிர்ப்புகளை பார்த்தாலோ என்னவோ, தற்போது அந்த முடிவு பின்வாங்கப்பட்டுள்ளது. அதன் படி, இந்திய விலகுங்கள் நல வாரியம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

திரும்ப பெறப்பட்ட கோரிக்கை : அதில், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, பிப்ரவரி 14, 2023 அன்று பசு அணைப்பு தினத்தை கொண்டாடுவதற்கான இந்திய விலங்கு நல வாரியத்தின் கோரிக்கையானது திரும்பப் பெறப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment