தாயுடன் உலா வரும் அரிய வெள்ளை சிங்கக்குட்டி! வனத்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ.!

தாயுடன் உலா வரும் அரிய வெள்ளை நிற சிங்கக்குட்டி, வனத்துறை அதிகாரி வீடியோ வெளியிட்டுள்ளார்.

வெள்ளை நிற சிங்கக்குட்டி அதன் தாய் மற்றும் குடும்பத்துடன் காட்டில் சுதந்திரமாக உலா வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரி(ஐஎஃப்எஸ் அதிகாரி) சுசாந்தா நந்தா, இந்த விடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதோ அரிதாகக்காணப்படும் வெள்ளை நிற சிங்கக்குட்டி, தன் தாயுடன் காட்டில் உலாவி வரும் வீடியோ என்று அவர் அந்த டிவீட்டில் பதிவிட்டிருந்தார். பூனைக்குட்டியா சிங்கக்குட்டியா என்று சொல்லும் படி, வெள்ளை நிறத்துடன் இருந்த அந்த சிங்கக்குட்டி, தாய் முன் செல்ல அதன் பின் அழகாக ஓடும் காட்சியை அந்த வீடியோவில் காணலாம்.

தாய் சிங்கமும் குட்டிகள் வருகிறதா என நின்று பார்த்து, அதன்பின் அவற்றை அழைத்து செல்கிறது, இந்த விடியோவை பார்த்த பலரும் வியந்து, ரசித்து வருகின்றனர். இந்த உலகில் வெறும் 3 வெள்ளை நிற சிங்கக்குட்டிகளே, சுதந்திரமாக வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது என்று சுசாந்தா நந்தா தனது டிவீட்டில் மேலும் கூறியிருந்தார், வீடியோ உங்களுக்காக…

Leave a Comment