ரொனால்டோவுக்கு மருத்துவ பரிசோதனையா.? இணையத்தில் வைரலாகும் புதிய புகைப்படம்.!

ரொனால்டோ புதியதாக இணைந்த சவூதி அரேபியாவின் அல்-நாஸர் கிளப் அணிக்காக, அணியில் சேருவதற்கு முன்பு வழக்கமாக செய்யும் மருத்துவ பரிசோதனை புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 

போர்ச்சுகீசிய கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டது போல ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.

ரொனால்டோவின் புகைபடம் பார்த்த ரசிகர்கள் சிலர், ‘ ரொனால்டோவுக்கு  மருத்துவ சிகிச்சை நடைபெறுகிறதா.?’ என கமெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். ஆனால் உண்மையில், ரொனால்டோ புதியதாக இணைந்த சவூதி அரேபியாவின் அல்-நாஸர் கிளப் அணிக்காக, அணியில் சேருவதற்கு முன்பு வழக்கமாக செய்யும் சாதாரண மருத்துவ பரிசோதனை என்பது பின்னர் தெளிவாகியது.

37 வயதான ரொனால்டோ 4,400 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் சவுதி அரேபிய அல் நாஸர் கிளப்பில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

cristiano - medical check

 

 

Leave a Comment