ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் குழுவின் முக்கிய புள்ளி பலி!

காசா நகரில் ஒரே இரவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹமாஸ் குழுவின் மூத்த அதிகாரி உயிரிழந்ததாக  இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சனிக்கிழமை பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான குண்டுகளை இஸ்ரேல் மீது வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதன்பின், ஹமாஸ் அமைப்பினர் மீது பதில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்.

அப்போது, தொடங்கிய அந்த போர் இந்த வார சனிக்கிழமையான இன்றுடன் 8வது நாளாக தொடர்ந்து மாறிமாறி தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காசா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல்களில் 447 குழந்தைகள் உயிரிழந்ததாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.

இந்த தொடர் தாக்குதலில் இதுவரை 1,200 பாலஸ்தீனியர்களும், 1,300 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள், நேற்று காசா நகரின் ஹமாஸ் பதுங்கு குழியில், வைக்கப்பட்டிருந்த 250க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை அதிரடியாக சண்டையிட்டு மீட்டது.

Israel Vs Palestine: காசாவில் இதுவரை 447 குழந்தைகள் உயிரிழப்பு- ஐ.நா அறிவிப்பு!

அந்த வகையில், காசா பகுதியில் நேற்று ஒரே இரவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், நேற்று இரவு ஹமாஸ் பயங்கரவாத குழுவின் வான்வழி தாக்குதல் நடவடிக்கையை நிர்வகிக்கும் தலைமையகத்தை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

ஐ.நா.வின் பதில் வெட்கக்கேடானது… இஸ்ரேல் கடும் கண்டனம்!

இந்த தாக்குதலில் ஹமாஸின் வான்வழி தாக்குதல் படை தலைவரான முராத் அபு முராத் கொல்லப்பட்டார் என்றும், இவர் தான் இஸ்ரேலுக்குள் பாராகிளைடர்கள் வாயிலாக நுழையும் திட்டம் வகுத்தவர், குறிப்பாக ஹமாஸ் பயங்கரவாதிகளை இயக்குவதில் பெரும் பங்கு இவருக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், 24 மணி நேரத்தில் காசாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் கூறியது. இதற்கிடையில், காசாவில் உச்சகட்ட மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக ஐ.நா குற்றம்சாட்டியுள்ளது.