Nayakan : சூப்பர் டூப்பர் பிளாப்…’நாயகன்’ படத்தால் 50,000 நஷ்டம்! மௌனம் கலைத்த தயாரிப்பாளர்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1987-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். இந்தத் திரைப்படம் இப்போது வெளியாகும் கேங்ஸ்டர் படங்களுக்கு முன்னோடி படமாக திகழ்கிறது. அந்த அளவிற்கு ஒரு தரமான கேங்ஸ்டர் படத்தை இயக்குனர் மணிரத்தினம் கொடுத்திருந்தார். படத்தில் கமல்ஹாசனும் கேங்ஸ்டர் எப்படி இருப்பாரோ அதே போலவே நடித்திருப்பார்.

இருப்பினும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்று ஒரு தகவல் இருக்கிறது. ஆனால் விமர்சன ரீதியாக இன்று வரை இந்த திரைப்படம் பேசப்படும் ஒரு திரைப்படமாக இருக்கிறது. குறிப்பாக  நாயகன் படம் விரைவில் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்படி தமிழ் சினிமாவின் தலை சிறந்த கேங்ஸ்டர் படமாக இருக்கும் இந்த திரைப்படத்தை சில இடங்களில் விநியோகம் செய்த பிரபல தயாரிப்பாளரான கே.டி.குஞ்சுமோன் சமீபத்திய பேட்டி  ஒன்றில் நாயகன் படத்தால் தனக்கு 50000 நஷ்டம் என பேசி உள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” நாயகன் படத்தின் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் எனக்கு மிகவும் நெருக்கமானவர். எனவே என்னிடம் அவர் ‘குஞ்சுமோன் எப்படியாவது படத்தை வாங்கிக்கொள் ’ என கூறினார். எனக்கு முதலில் அதில் சுத்தமாக விருப்பமில்லை என்று சொன்னேன். பிறகு, எங்களுக்கு மொத்தம் ரூ.30 லட்சம் கொடுங்கள் என்று என்னிடம் கேட்டார்கள். பின், கடைசியாக 25 லட்சத்துக்குப் படத்தை வாங்கினேன்.

நான் மட்டும் அந்தப் பணத்தைக் கொடுக்காமல் இருந்திருந்தால் ‘நாயகன்’ திரைப்படம்  வெளியாகியிருக்காது. நான் தான் அந்த படத்திற்கு பணம் கொடுத்தேன்.  அந்த படத்தால் எனக்கு  ரூ.50,000 நஷ்டம் ஏற்பட்டது. நான் அதை நகரத்திலும் வெளியிட்டேன். இந்த திரைப்படம்  சூப்பர் டூப்பர் ஃப்ளாப் ஆனால் எனக்கு படம் பிடித்திருந்தது. இதில் கமல் நன்றாக நடித்திருந்தார், மணிரத்னம் சிறப்பாக செய்திருந்தார் ஆனால் அது கமர்ஷியலாக இல்லை” என்றும் குஞ்சுமோன் தெரிவித்துள்ளார்.

மேலும், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் மலையாளத்தில் பல படங்களை தயாரித்து இருக்கிறார். தமிழில் ஜென்டில்மேன், சூரியன், கோடீஸ்வரன், உள்ளிட்ட படங்களை தயாரித்து இருந்தார். அடுத்ததாக ஜென்டில்மேன் 2 திரைப்படத்தை தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.