ஈரோடு இடைத்தேர்தலில் 6 சுற்றுகள் முடிவு – காங்கிரஸ் முன்னிலை..!

ஈவிகேஎஸ் இளங்கோவன்  அவர்கள், 46116 வாக்குகள் பெற்று, 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

கடந்த மாதம் 27-ஆம் தேதி  ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்  பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் 6-வது சுற்று நடைபெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன்  அவர்கள், 46116 வாக்குகள் பெற்று, 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 16,778 வாக்குகள் பெற்று பின்னடைவை  சந்தித்துள்ளார்.

Leave a Comment