கர்நாடகாவில் ராமர் கோயில்! விவசாயிகளுக்கான கடன் வரம்பு உயர்வு! – பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்பு

விவசாயிகளுக்கு பூஜ்ஜிய வட்டியில் கடன் வழங்கப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு.

கர்நாடக சட்டசபை தேர்தல்:

karnadakaelection2023

கர்நாடக மாநிலம் சட்டமன்ற பொதுத்தேர்தல் தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது.  தேர்தலுக்கு இன்னும் இரண்டரை மாதங்கள் மட்டும் உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பொதுக்கூட்டங்கள், யாத்திரைகளை நடத்தி வருகின்றன. இதில், குறிப்பாக பாஜக சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அடிக்கடி கர்நாடகம் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

கர்நாடக பட்ஜெட் தாக்கல்:

karnadakabudget

இந்த சூழ்நிலையில், ஏற்கனவே அறிவித்தப்படி 2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் (வரவு-செலவு திட்டம்) கர்நாடக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக சட்டசபையில் முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதில், அரசு முதுநிலை மற்றும் அரசு பட்டயக் கல்லூரிகளில் பயிலும் சுமார் 8 லட்சம் மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

கர்நாடகாவில் ராமர் கோயில்:

ramartemple17

மாநிலத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.1000 கோடியை ஒதுக்கீடு செய்தார். மேலும் கர்நாடக ராமநகராவில் கம்பீரமான ராமர் கோவில் கட்டப்படும் என்றும் உறுதியளித்தார். பெங்களூருவில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில், பெங்களூரு சாலைகளுக்கு முதல்வர் ரூ.1600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். பருவநிலை மாற்றம், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.3000 கோடி ஒதுக்கீடு. ஹனுமான் பிறந்த இடமாக நம்பப்படும் கொப்பளத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் இலவச பயிற்சி:

akni

மருத்துவக் கல்விக்காக, சித்ரதுர்காவில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க கர்நாடகா ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த 10,000 இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தில் அக்னிவீரர்களுக்கு இலவச பயிற்சியை கர்நாடகா வழங்கும் என தெரிவித்தார். சர்ச்சையில் சிக்கியுள்ள கலசா-பந்தூர நலத் திருவு யோஜனே திட்டத்தின் பணிகளைத் தொடங்க ரூ.1,000 கோடி விடுவிக்கப்படும் வறட்சி பாதித்த பகுதிகளில் கிணறுகள், அணைகளை மேம்படுத்த ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்:

farmersloan

விவசாயிகளுக்கான வட்டியில்லா குறுகியகால கடன் வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது எனவும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். பயிர் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என பொம்மை உறுதியளித்தார். இது தவிர, பயிர்களை பாதுகாத்து சேமித்து வைக்க ரூ.175 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பொம்மை கூறினார்.

பட்ஜெட் விவரம்:

kbudget2023

இந்த ஆண்டு வருவாய் உபரி பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார் முதல்வர் பொம்மை. இந்த ஆண்டு மொத்த கடன் ரூ.77,750 கோடியுடன் ரூ.3.09 லட்சம் கோடி பட்ஜெட்டை முதல்வர் அறிவித்துள்ளார். பெங்களூரு சட்டசபை தேர்தலை முன்னிட்டு ₹10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

sittharamaiyaa

இதனிடையே,  கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தில் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காதில் பூவுடன் பங்கேற்றனர். கர்நாடக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என சித்தராமையா குற்றசாட்டியுள்ளார்.

Leave a Comment