மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை.! மாலையில் போலீஸ் தீவிர ரோந்து.!

புயல் கரையை கடப்பதன் காரணமாக இன்று மாலை முதல் ரோந்து பணிகளில் சென்னை காவல்துறையினர் ஈடுபட உள்ளனர்.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று மாலை கரையை கடக்க உள்ளதால் வடதமிழகம் மற்றும் கடற்கரை பகுதிகளில் 60 முதல் 70 கிமீ வரையில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதனால் மக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனை கண்காணிக்க தற்போது சென்னை காவல்துறையினர் இன்று மாலை முதல் ரோந்து பணியில் ஈடுபட தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், 13 காவல் குழுக்களும் மீட்பு பணிகளுக்காக தயாராக இருக்கின்றனர் எனவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment