#T20 Breaking: 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி சூர்யகுமார் யாதவ் ருத்திர தாண்டவம்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி மவுண்ட் மவுங்கனுயில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன்(36), ரிஷப் பந்த்(6) ஆட்டமிழக்க தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடங்கினார் சூர்யகுமார் யாதவ் அவருடன் களத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.ஹர்திக் பாண்டியா 13 ரன்னிற்கு ஆட்டமிழக்க  தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சவுதி வீசிய பதில் டக் அவுட் ஆகினர்.

யாரும் எதிர்பார்க்காத ருத்திர தாண்டவத்தை ஆடிய சூர்யகுமார் யாதவ் 52 பந்துகளில் 111 ரன்களை எடுத்தார் அதில் 11 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் அடங்கும்.20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்தது.

இதனைத்தொடர்ந்து 192 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் ஓவரிலே ஃபின் ஆலன் விக்கெட்டை புவனேஷ்வர் குமாரிடம் பறிகொடுத்தது.ஆனாலும் சற்றும் சளைக்காமல் விளையாடிய கேன் வில்லியம்சன் 61 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

பின்பு வந்த யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை டெவோன் கான்வே மட்டும் 25 ரன்களை எடுத்தார்.18.5 ஓவரில் நியூசிலாந்து அணி 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது.இந்திய பந்து வீச்சாளர்களில் தீபக் ஹூடா அதிகபட்சமாக  4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இறுதியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று  3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.ஆட்டநாயகன் விருதை சூர்யகுமார் யாதவ்  பெற்றார்.

 

Leave a Comment