தகுதியுடைய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செவிலியர்கள் யாரும் உடலை வறுத்துக்கொள்ள வேண்டாம் என்று மருத்துவத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்.

தகுதியுடைய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்திரம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 8 செவிலியர்கள் சங்கம் உள்ளது. இதனால் யார் போராட்டம் நடத்துகின்றனர் என்று தெரியவில்லை. போராடும் செவிலியர்கள் சார்பாக யாரும் எங்களை பார்க்க வரவில்லை. செவிலியர்கள் யாரும் உடலை வறுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, பணி நிரந்திர உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறை போராட்டம் நடத்தும் செவிலியர்களுடன் பேசுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், காவல்துறையுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததாதல், செவிலியர்கள் சாலை மறியில் ஈடுபட்டதாகவும், இதனால் அவர்களை காவல்துறை கைது செய்துள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தகுதியுடைய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படும் பணி நடைபெற்று வருகிறது என மருத்துவத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Comment