உ.பி-யில் இறைச்சி இறக்குமதி தடை நீக்கம்.!

கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த காய்ச்சல் பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த காய்ச்சல் பரவாமல் இருக்க பிற பகுதிகளில் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பறவைக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில, மத்திய அரசு அளித்த ஆலோசனையைத் தொடர்ந்து பிற மாநிலங்களிலிருந்து கோழி இறக்குமதி செய்வதற்கான தடையை நேற்று நீக்கியது உத்தரபிரதேச அரசு. இந்த நடவடிக்கை மாநிலத்தில் உள்ள கோழி வணிகர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக வந்துள்ளது.

உ.பி. மற்றும் கோழி இறக்குமதி செய்யப்படும் மாநிலங்களில் கோழி வியாபாரத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஏற்படும் நிதி இழப்பு காரணமாக இந்தத் தடை நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.