சவால்கள் வரும்போது எப்படி செயல்படுகிறோம் என்பதை லடாக் சம்பவம் உலகிற்கு எடுத்துக்காட்டியது- பிரதமர் மோடி!

சவால்கள் வரும்போது எப்படி செயல்படுகிறோம் என்பதை லடாக் சம்பவம் உலகிற்கு எடுத்துக்காட்டியதாக சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 74 -வது சுதந்திர தினம், இன்று கொண்டாடப்படும் நிலையில், டெல்லி, செங்கோட்டையில் இன்று தேசிய கோடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார். அதன்பின் நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றினார்.

அந்த உரையில் அவர், பயங்கரவாதம் போன்ற சவால்களை சமாளிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது எனவும், இந்த பேரழிவுகள் அனைத்தையும் கையாளும் திறமையும் இந்தியா கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எல்லைகளில் நாட்டின் அதிகாரத்தை சவால் செய்ய தவறான முயற்சிகள் நடந்துள்ளதாகவும், கட்டுப்பாடு முதல் எல்.ஐ.சி வரை, நாட்டின் இறையாண்மை, நாட்டின் படைகள், எங்களது துணிச்சலான வீரர்கள் தங்கள் சொந்த மொழியில் பதிலளித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, இந்தியா அதன் அதிகாரத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறதாகவும், சவால்கள் வரும்போது எப்படி செயல்படுகிறோம் என்பதை லடாக்கில் ஏற்பட்ட சம்பவம் உலகிற்கு எடுத்துக்காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.