வெளியே போனாலும் வீட்டில் இருந்தாலும் இதை கடைபிடிங்க – பீலா ராஜேஷ் .!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவித்துள்ளதால் மக்கள் அனைவரும் வெளியே போகும் பொழுது முகக்கவசம் அணிவது அவசியம் என்று தெரிவித்துள்ளார். அதில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் மேலும் வீட்டில் உள்ள முதியவர்கள் நோய் பாதிப்பு ஏற்படக்கூடியவருடன் பேசும் பொழுது முகக்கவசம் அணிவது கட்டாயம் அணிய வேண்டும்.

அனைவரும் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும்.அனைவரும் தங்களிடம் உள்ள கைகுட்டைகள், துப்பட்டா அல்லது வீட்டில் தயாரிக்கப்படும் முகக்கவசம் ஆகியவற்றை பயன்படுத்தலாம. அதை முறையாக சோப்பு போட்டு துவைத்து பின்னர் சூரிய ஒளியில் காயவைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.