பேஸ்புக் மூலம் இனி ஷாப்பிங் செய்யலாம்!!!

தற்சமயம் பேஸ்புக் நிறுவனம் பல மாற்றங்களை செய்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் இப்போது ஷாப்பிங் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது பேஸ்புக் நிறுவனம். இந்த பேஸ்புக் பொறுத்தவரை 450 மில்லியன் பயனாளர்களை கவர்ந்துள்ளது, மேலும் இப்போது பேஸ்புக்கில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அப்டேட் பொதுவாக அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இப்போது வந்து

ள்ள பேஸ்புக் வாட்ச் பல்வேறு வரவேற்ப்பை பெற்றுள்ளது, இவை யூடியூப் நிறுவனத்திற்க்கு போட்டியாக வந்துள்ளது.

பேஸ்புக்: 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகம் விரும்புவது இந்த பேஸ்புக், மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தான் பேஸ்புக் பயன்பாடு அதிகம் உள்ளது, மேலும் இவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட் பொதுவாக அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது.

மார்க்கெட் ப்ளேஸ்: 

பேஸ்புக் நிறுவனம் இப்போது மார்க்கெட் ப்ளேஸ் என்ற புதிய சேவையை ஆரம்பித்துள்ளது, இவற்றின் மூலம் பொருட்களைவாங்கவோ அல்லது விற்ப்பனை செய்யவோ முடியும், இவை அனைத்துப் பயனர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.

ஐரோப்பா: 

இந்த மார்க்கெட் ப்ளேஸ் எனும் சேவை கூடிய விரைவில் 17ஐரோப்பிய நாடுகளில் பயன்படும் வகையில் இருக்கும் எனக்கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் மே மாதத்தில் மட்டும் 18 மில்லியன் பொருட்களை பேஸ்புக் நிறுவனம் விறப்பனைசெய்துள்ளது.

விளம்பரம்: 
ஷாப்பிங் செய்ய அனுமதிக்கும் பல விளம்பர அம்சங்களை சோதனை செய்துள்ளது பேஸ்புக் நிறுவனம், அனைவருக்கும் மிக எளிமையான முறையில் பொருட்களை வாங்கவும் விற்க்கவும் பயன்படும் இந்த மார்க்கெட் ப்ளேஸ்.

Leave a Comment