பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு இருக்க வேண்டும் – அன்பில் மகேஷ்

பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு இருக்க வேண்டும்  என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23-ஆம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு 13-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல் தெரிவித்திருந்தது.

தவறான செய்தி

ஆண்டிற்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும். பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் வருகை பதிவு இருந்தால் தான் தேர்வு எழுத முடியும் என்ற நிலையில் மாற்றப்பட்டுள்ளது.

இரண்டு அல்லது மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்குகிறோம் என்றும் மாணவர்களை தேர்வு எழுத வைக்க முயற்சிக்கிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாக செய்திகள் வெளியானது. இது தவறானது என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.

75% பள்ளிக்கு வந்தால் மட்டுமே தேர்வு எழுத முடியும் 

இந்த நிலையில், இதுகுறித்து தஞ்சாவூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே பொதுதேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று பரவும் செய்தி தவறானது; 75% பள்ளிக்கு வந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment