ஈரானில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 73 பேர் உயிரிழப்பு!

கடந்த 3 ஜனவரி 2020-ம் ஆண்டு அன்று ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ட்ரோன் தாக்குதலில் இராணுவ ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டார். ஜெனரல் காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட நான்காவது ஆண்டு நினைவு நாளில் தெற்கு நகரமான கெர்மனில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகே சுலைமானிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 

அப்போது யாரும் எதிர்பார்த்த நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு குண்டுவெடிப்புகள் வெடித்தன.  இந்த குண்டு வெடித்ததில் மக்கள் அலறியடித்து ஓடினர். இருப்பினும் கல்லறைக்கு அருகில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் 73- மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 170 பேர் காயம் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த கெர்மன் துணை ஆளுநர் இது பயங்கரவாத தாக்குதல் என்று தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் அங்குள்ள மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.