இரண்டாவது நாளாக பசிபிக் பெருங்கடலில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூ கலிடோனியாவின் கிழக்கே சனிக்கிழமையன்று 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் ஓர் அங்கமாக நியூ கலிடோனியா தீவுகள் அங்கு இருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதே பகுதியில் (பிஜி, வானாட்டு தீவுகளுக்கு) அருகே 7.7 என்ற ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கத்தால் பிஜி, வானாட்டு தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அதனை தொடர்ந்து 2-வது நாளாக பசிபிக் பெருங்கடல் பகுதியில்7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை இல்லை என தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.