வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 24*7 ஹெல்ப்லைன்.. தனியார் நிறுவனம் அசத்தல் அறிவிப்பு.!

இந்தியாவின் மிகவும் நம்பகமான தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக (என்ஆர்ஐ) 24×7 இன்பௌண்ட் ஹெல்ப்லைனை அறிமுகப்படுத்தியது. இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் வாடிக்கையாளர்கள் இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஹெல்ப்லைன் நம்பரை (+91- 022 6928 9090) எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் வெளியிட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹெல்ப்லைன் 24 மணி நேரமும் இயங்கும் என்பதால்  வெளிநாடு வாழ் இந்தியர்கள் எப்போது வேண்டும் என்றாலும் வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதிகளுடன் எளிதாகத் தொடர்புகொண்டு தங்களின் கேள்விகள், பாலிசி தொடர்பான விசாரணைகள், பிரீமியம் கட்டண உள்ளிட்ட பல்வேறு சேவைகளை எந்த நேரத்திலும் தெரிந்துகொள்ள முடியும்.

READ MORE- உ.பி.யில் கோர விபத்து… 7 குழந்தைகள் உட்பட15 பேர் உயிரிழப்பு!

எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் இதன் சேவைகளை  ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் அறிமுகம் செய்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பாலிசி புதுப்பித்தல்கள், காப்பீட்டுப் பலன்களைப் புரிந்துகொள்வதில் உதவி தேவைப்பட்டாலும் ஹெல்ப்லைன் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஹெல்ப்லைன் அறிமுகம் குறித்து பேசிய  எஸ்பிஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமித் ஜிங்ரன்( Amit Jhingran) “SBI Life  எங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எங்கள் மதிப்புமிக்க வெளிநாடு வாழ் இந்திய வாடிக்கையாளர்களுக்கு நேரம் கடந்து தடையற்ற சேவை தேவை என்பதை நாங்கள் அறிந்தோம்.அதனால் 24×7 ஹெல்ப்லைன் தொடங்கப்பட்டது.

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை மற்றும் ஆதரவை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை இந்த செயல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் அவர் கூறுகையில், இந்த முயற்சியின் மூலம் உலகளாவிய வாடிக்கையாளர்களுடனான எங்கள் உறவை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் எங்கள் அயராத பணிகள் தொடரும் என தெரிவித்தார்.

 

Leave a Comment