13YrsofEndhiran : தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்திய “எந்திரன்”! பிரமாண்ட வசூல் எவ்வளவு தெரியுமா?

எந்திரன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13-ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது . படம் வெளியாகி 13-ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதனுடைய வசூல் குறித்த விவரம் கிடைத்துள்ளது.

எந்திரன்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன். இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், டேனி டென்சோங்பா, சந்தானம், ஷ்ரியா சர்மா, கருணாஸ், கலாபவன் மணி, கொச்சின் ஹனீபா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

படத்திற்கு கிடைத்த வரவேற்பு 

இந்த திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் இப்படியெல்லாம் ஒரு திரைப்படம் எடுக்கமுடியுமா என்கிற அளவிற்கு ரோபோவை வைத்து ஒரு அருமையான படத்தை ஷங்கர் கொடுத்திருந்தார். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் பிரமாண்டமாக இருக்கும் என்றே கூறலாம்.

படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவு

இந்த நிலையில் எந்திரன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13-ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் 13YrsofEndhiran என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படத்தில் தங்களுக்கு பிடித்த காட்சிகளை எடுத்து வெளியீட்டு ஷங்கரின் இயக்கத்தையும் ரஜினியின் நடிப்பையும் பாராட்டி வருகிறார்கள்.

எந்திரன் வசூல் 

எந்திரன் திரைப்படம் வெளியாகி 13-ஆண்டுகள் ஆன நிலையில், மொத்தமாக படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 130 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 375 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த தகவலை அந்த சமயமே தயாரிப்பாளர் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

இப்போது பல படங்கள் 300, 400 கோடிகளை தாண்டி வசூல் செய்து வருகிறது. ஆனால். 2010-ஆம் ஆண்டு சமயத்தில் எல்லாம் 300 கோடிகளுக்கு மேல் ஒரு படம் வசூல் செய்தது என்றால் அது சாதாரணமான விஷயமே இல்லை. ஆனால், ரஜினிக்கு இருந்த மார்கெட்டிற்கும், படமும் அருமையாக இருந்த காரணத்தால் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலை குவிந்திருந்தது.