’12 மணி நேர வேலை’ – வலுக்கும் எதிர்ப்புகள்..! தொழில்சங்கங்களுடன் அரசு ஆலோசனை..!

நாளை மறுநாள் தமிழக அரசு முக்கியமான தொழில்சங்கங்களுடன் ஆலோசனை

நேற்று தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு பேரவையில் கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை வரலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதிமுக, மமக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தோழமை கட்சிகளின் எதிர்ப்பையும் தாண்டி இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.

தொழில்சங்கங்களுடன் ஆலோசனை 

இதுகுறித்து தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், நாளை மறுநாள் தமிழக அரசு முக்கியமான தொழில்சங்கங்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

trade union - tngovt

Leave a Comment