தமிழகத்தில் 1.5 லட்சம் விநாயகர் சிலை வைப்பது உறுதி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடைக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  

விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதோ அல்லது  விநாயகர் சிலைகளை பார்வாயாக எடுத்துச் செல்தோ, சிலைகளை கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை என்று நேற்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த 36 ஆண்டுகளாக இந்து முன்னணி இயக்கம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறுகையில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை இந்துக்கள் ஒற்றுமை விழாக எழுச்சியுடன் கொண்டாடி வருகிறது. இதுவரை பலவித கட்டுப்பாடுகளை அரசு விதித்த போதிலும், அவற்றையெல்லாம் அனுசரித்து விழாவை முன்னெடுத்து வந்துள்ளது என்பதை அரசும், அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் நன்கு அறிவர்.

இந்நிலையில் இந்த ஆண்டு உலகே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ள கொராணா தொற்று நோய் காரணமாக சுகாதாரத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் விழா எடுக்க இந்து முன்னணி ஏற்பாடு செய்து வருகிறது.கடந்த 5-ஆம் தேதி தமிழக அரசின் செயலர் கூட்டிய கூட்டத்தில் நமது கருத்தை வலியுறுத்தி கூறியிருந்தோம். அப்போது அரசு தரப்பும் விழா நடத்துவதற்கு சாதகமாகவே பேசினர்.

மக்களிடையே ஆன்மிக நம்பிக்கை தான், நோய் எதிர்ப்பு சக்தியையும், நோயை எதிர்த்துப் போராடும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். அதற்காகவே, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாகவும், அதே சமயம் ஆன்மீக சூழ்நிலையிலும், கட்டுப்பாட்டுடனும் நடத்திட ஏற்பாடுகளை செய்து வருகிறது.தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எத்துனை ஆர்வம் காட்டியது, உச்சநீதி மன்றம் வரை சென்று வென்று வந்தது என்பதை மக்கள் அறிவர்.

மதுக்கடைகளில் கூடிய கூட்டத்தை அரசு வேடிக்கை பார்த்தது, அதே சமயம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்குத் தடை விதித்துள்ளது வேதனையானது. விநாயகரிடம் விளையாடிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் நிலை என்னவானது என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். ரம்ஜான் கஞ்சிக்கு அரிசி கொடுத்தும், நாகூர் தர்கா விழாவிற்கு 40 கிலோ சந்தனமும் கொடுத்தது தமிழக அரசு. தூத்துக்குடி பனிமய மாதா விழா குறித்து பாதிரியார் பேட்டி தர மாவட்ட ஆட்சியரும், கண்காணிப்பாளரும் பக்கத்தில் உட்கார்ந்து ஆதரவு கொடுக்க வைத்தது தமிழக அரசு ஆனால், இந்துக்களின் அனைத்து விழாக்களையும் தடுத்து நிறுத்த அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தியதை இந்துக்கள் அறிவர்.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளது. பிற மதங்களுக்கு எத்தகைய உரிமைகள் உள்ளனவோ அதேபோல இந்துக்களுக்கும் வழிபாட்டு உரிமைகள் உள்ளன எனவே வழிபாட்டு உரிமைகளை மீட்கும் வகையில் , தக்க முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் ஆகஸ்ட் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா ஒன்றரை இலட்சம் இடங்களில் திட்டமிட்டபடி நடக்கும் என்று இந்து முன்னணி உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent Posts

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

5 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

6 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

11 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

11 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

12 hours ago

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…

12 hours ago