இந்த குறியீடு உள்ள ₹500 நோட்டுகள் செல்லும்! – ரிசர்வ் வாங்கி

நம்பர் சீரிஸில் ஸ்டார் குறியீடு இருக்கும் 500 ரூபாய் நோட்டுகள் போலியானவை இல்லை ரிசர்வ் வங்கி விளக்கம். 

ரூபாய் நோட்டுகளின் சீரியல் நம்பர் பகுதியில் முன்னொட்டுக்கும் வரிசை எண்ணுக்கும் இடையில் ஒரு நட்சத்திரக் குறியீடு சேர்க்கப்பட்டுள்ளது.  இந்த குறியீடு உள்ள நோட்டுகள் போலியானது என செய்திகள் வெளியான நிலையில், இதுகுறித்து ரிசர்வ் வாங்கி விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, நம்பர் சீரிஸில் ஸ்டார் குறியீடு இருக்கும் 500 ரூபாய் நோட்டுகள் போலியானவை இல்லை; அவை செல்லும் என  விளக்கம் அளித்துள்ளது. ஸ்டார் குறியீடு உள்ள நோட்டுகள் போலியானவை என வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி, குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.