மனைவி விவாகரத்து கேட்டதால் குடும்பத்தையே சுட்டு கொன்ற அமெரிக்க கணவர்.! மொத்தம் 7 கொலை.!

அமெரிக்காவில் 42 வயது மதிக்க தக்க நபர் ஒருவர் தனது மனைவி விவாகரத்து கேட்டதால் தனது குடும்பத்தில் அனைவரையும் கொலை செய்துள்ளார் . 

அமெரிக்காவில் உட்டா மாநிலத்தில் 42 வயது மதிக்கத்தக்க ஒரு நபரிடம் அவரது மனைவி விவகாரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதனை அடுத்து அந்த நபர் தனது குடும்பத்தையே சுட்டு கொலை செய்துள்ளார்.

தனது மனைவி, தாய் மற்றும் 5 குழந்தைகளை அந்த நபர் சுட்டு கொன்றுள்ளார். பிறகு அதே துப்பாக்கியால் தானும் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த புதன் கிழமை இரவு உட்டா மாநிலத்தில் ஏனோக் நகரில் உள்ள அவர்களது வீட்டில் அந்த சம்பவம் நடந்ததாக கடந்த வியாழக்கிழமை அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment