மத நிகழ்ச்சி ஒன்றில் பணத்தை மழையாக வாரியிறைத்தஅல்பேஷ் தாக்கூர் ..!

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அல்பேஷ் தாக்கூர் (Alpesh Thakur) மத நிகழ்ச்சி ஒன்றில் பணத்தை மழையாக வாரியிறைத்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் இவர் பதான் நகரில் தனது சாதி சார்ந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது குஜராத்தின் பிரபல பாடகியான கீதா ரபரியின் (Geetha Rabari) இசை நிகழ்ச்சியின் போது அவர் பணத்தை வாரியிறைத்தார்.இந்நிலையில் நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்தும் நோக்கத்துடனேயே இந்தப் பணம் வாரியிறைக்கப்பட்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Comment