தமிழக அரசு மது வருமானத்தை நம்பியிருப்பது பெரும் அவமானம்!அன்புமணி ராமதாஸ்

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்,தமிழகத்தில் மாதந்தோறும் 500 மதுக்கடைகளை மூடி, காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி முதல் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள 700 மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3 ஆயிரத்து 321 மதுக்கடைகளை கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூடிய தமிழக அரசு, நகர்ப்புறங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக 700 மதுக்கடைகளை திறந்ததாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு பிப்ரவரியில் 2வது கட்டமாக 500 மதுக்கடைகளை மூடும் ஆணையில் கையெழுத்திட்டதாகவும், ஆனால் 3வது கட்டமாக 500 கடைகளை மூடாமல், மது வருமானத்தை அரசு நம்பியிருப்பது பெரும் அவமானம் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment