அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை! மெக்சிகோ எல்லையில் சுவர் அமைப்பதற்கு நிதி வழங்காவிட்டால் அரசு முடங்கிவிடும்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ,மெக்சிகோ எல்லையில் சுவர் அமைப்பதற்கு நிதி ஒதுக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்காவிட்டால், அரசு முடங்கிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்ட விரோத குடியேற்றம், போதைப்பொருள் கடத்தலை தடுக்க மெக்சிகோ எல்லையில் பிரம்மாண்ட தடுப்பு சுவரை அமெரிக்க அமைக்க உள்ளது. இந்த திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில், கூடுதல் நிதி வழங்க ஒப்புதல் வழங்காவிட்டால் வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடப்படுவதை தவிர வேறு வழியில்லை என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். எல்லை பாதுகாப்பே நாட்டிற்கு முதன்மையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment