குடியுரிமை..! மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

High court: அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் வசித்த ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டில் உள்ளனர், அதன்படி அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்து வருகின்றனர்.

Read More – நிதி கேட்டால் பிரிவினைவாதி என்கிறார்கள்… முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Read More – ஈபிஎஸ்-க்கு எதிராக திமுக மான நஷ்ட ஈடு வழக்கு!

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்” என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More – பிரதமர் மோடி வருகை… கருப்பு கொடி காட்டி நாளை ஆர்ப்பாட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு

மேலும், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெற உரிமையில்லை என மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது, இதற்கு, “மனு பொதுப்படையாக உள்ளது. முகாமில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக” தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது.

 

 

Leave a Comment