ரம்ஜான் நோன்பு தொடக்கம்…விடாமல் தாக்கும் இஸ்ரேல்! 24 மணி நேரத்தில் 67 பலி…

Gaza war: இஸ்லாமிய புனித மாதமான ரமழானின் முதல் நாளில் (ரம்ஜான் நோன்பு தொடக்கம்) அதாவது கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் குறைந்தது 67 பாலஸ்தீனியர்கள் உயிரழிந்ததாகவும், 106 பேர் காயமடைந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

READ MORE – காசாவில் 6 வார போர் நிறுத்தத்தை நோக்கி அமெரிக்கா… ரமலான் வாழ்த்து தெரிவித்த பைடன்!

போர் தொடங்கிய ஐந்து மாத காலத்தில் காசாவின் 2.3 மில்லியன் மக்களில் 80% மக்களைத் தங்கள் வீடுகளை இழந்து, ஆயிரக்கணக்கான மக்கள் பஞ்சத்தின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்னர். இதுவரை காசாவில் 31,112 உயிரிழந்துள்ளனர் மற்றும் 72,760 பேர் காயமடைந்தனர். அவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.

READ MORE – அமெரிக்கா எச்சரித்த போதும் அடம்பிடிக்கும் இஸ்ரேல்…

இதனிடையே, கத்தார், அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ரமழானுக்கு முன்னதாக போர்நிறுத்தம் செய்யும் என்று எதிர்பார்த்தன. இதனிடையே இந்த போரை நிறுத்தக்கோரி உலக நாடுகள் பல முயற்சி எடுத்தும் பலன் அளிக்கவில்லை தாக்குதல் தீவிரமடைந்து தான் வருகிறது.

READ MORE – ஆபாச பட நடிகை சோபியா லியோன் 26 வயதில் மரணம்..! வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

இதற்கிடையில், நேற்றைய தினம் காசாவில் மனிதாபிமான நெருக்கடி குறித்து விரக்தியை வெளிப்படுத்திய பைடன், புனித ரமலான் மாதம் இந்த ஆண்டு, இது மிகப்பெரிய வலியின் தருணத்தில் வருகிறது வ்ந்தரு கூறிய அவர், காசாவில் 6 வார போர் நிறுத்தத்தை நோக்கி அமெரிக்கா செயல்படும் என்று உறுதி அளித்த அதிபர் ஜோ பைடன், இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Leave a Comment