ரூ.48,000 கோடி வாராக்கடன்களை வெறும் 11,183 கோடிக்கு விற்ற எஸ் பேங்க்.!

தனியார் கடன் வழங்குனரான எஸ் பேங்க் (Yes Bank), ரூ.48,000 கோடி மதிப்புள்ள வாராக்கடன்களை ஜேசி ஃப்ளவர்ஸ் ஏஆர்சிக்கு விற்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்விஸ் சவால் எனும் பொது ஏலம் விடும் முறையில் ஜேசி ஃப்ளவர்ஸ் ஏஆர்சி (JC Flowers ARC) க்கு எதிராக எந்த நிறுவனமும் ஏலம் கேட்க முன்வராததால், ஜேசி ஃப்ளவர்ஸ் ஏஆர்சி வென்றதாக எஸ் பேங்க் (Yes Bank) அறிவித்தது. ஜேசி ஃப்ளவர்ஸ் ஏஆர்சி தனது ஆரம்ப ஏலத்தொகையாக ரூ.11,183 கோடி யை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

செர்பரஸ் கேபிடல் மற்றும் அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஆஃப் இந்தியா (ஏஆர்சிஐஎல்) தனது ஏலத்தை வாபஸ் பெற்ற பிறகு, ஜேசி ஃப்ளவர்ஸ் ஏஆர்சி, யெஸ் பேங்க்கின் செயல்படாத கடன் இலாகாவை ₹11,183 கோடிக்கு சுவிஸ் சவால் ஏலத்தில் வென்றது.

ஏலத்தை சமர்ப்பித்த நேரத்தில் ஜேசி ஃப்ளவர்ஸ் ஏஆர்சி $50 மில்லியன் பணத்தை டெபாசிட் தொகையாக செலுத்தியிருந்த நிலையில் தற்போது 60 நாட்களுக்குள் ஜேசி ஃப்ளவர்ஸ் ஏஆர்சி நிறுவனம்  ₹1,677 கோடியை செலுத்த வேண்டும்.

Leave a Comment