முன்னாள் அமைச்சர் வழக்கை எதிர்கொள்ள தயாராக இல்லாமல் ஓடி ஒழிவது ஏன்?- பிரேமலதா

தமிழக காவல்துறையால் முன்னாள் மந்திரியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நகைப்பாக இருக்கிறது என பிரேமலதா பேட்டி.

சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில், மொத்தம் 336 அடிக்குமாடி வீடுகள், நான்கு பிளாக்குகளாக உள்ளன. அவற்றில் டி பிளாக்கில் 24 வீடுகள் உள்ளன. இந்த கட்டடத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வரும் நிலையில்,  இடிந்து விழுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த கட்டட விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரேமலதா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘இந்த கட்டிடம் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டு திமுக ஆட்சியில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மக்கள் உடைமைகளை பொருட்களை எடுத்து கொண்டு சாலையில் நிற்கும் நிலைக்கு வந்துள்ளனர். எங்கே செல்வது என்று தெரியாமல் மக்கள் நிற்கின்றனர். இந்த நிலைமைக்கு ஆட்சியாளர்களே  காரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை 10 நாட்கள் ஆகியும் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழக காவல்துறையால் முன்னாள் மந்திரியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நகைப்பாக இருக்கிறது. முன்னாள் அமைச்சர் வழக்கை எதிர்கொள்ள தயாராக இல்லாமல் ஓடி ஒழிவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Recent Posts

மோடியுடன் இந்திய அணி ..! கோச் முதல் வீரர்கள் வரை மனம் திறந்து பேசியது என்ன?

டெல்லி : 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வென்று அசத்தியது. இந்நிலையில், நேற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து…

4 mins ago

இந்தியாவில் அறிமுகமான பஜாஜ் ஃப்ரீடம் 125 CNG! இது தாங்க விலை ..!

பஜாஜ் ஃப்ரீடம் 125 CNG : பஜாஜ் ஆட்டோ ஃப்ரீடம் 125-க்கான புதிய பைக்கை உருவாக்கியுள்ளது. இந்த மோட்டார் பைக் 330 கி.மீ வேகமாக வரை செல்லும்…

20 mins ago

பகுஜன் சமாஜ்வாடி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.! அரசியல் தலைவர்கள் கண்டனம்.!

சென்னை: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலையும், மாநில அரசின் மீதான கண்டனங்களையும் பதிவு செய்து…

26 mins ago

4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த நபர்..! அதிர்ச்சி அளிக்கும் வைரல் வீடியோ..!

சத்தீஸ்கர் : மாநிலம் ராய்பூரில் வீட்டுவசதி வாரிய கணக்காளர் (housing board accountant) ஒருவர் திடீரென அலுவலக கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட…

34 mins ago

ஆம்ஸ்ட்ராங் படுகொலை., குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.! ராகுல் காந்தி இரங்கல்.!

டெல்லி: BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். நேற்று, சென்னையை அடுத்த பெரம்பூர்…

1 hour ago

ஆம்ஸ்ட்ராங் படுகொலை…கதறி அழும் பா.ரஞ்சித்!

சென்னை: பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை, பெரம்பூர் பகுதியில் உள்ள அவரது…

1 hour ago