இந்தியா

பலாத்காரம் செய்ய முயன்ற ‘கொடூரன்’ ! பெண்ணை காப்பாற்றிய தெரு நாய் ..!

மும்பை : கடந்த ஜூன் 30-ஆம் தேதி அன்று வாசாயில் உள்ள துங்கரேஷ்வர் கல்லியில், 32 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய ஈடுபட்ட கொடூரனை அங்குள்ள தெரு நாய் ஒன்று காப்பாற்றி உள்ளது. இந்த சம்பவம் அதிகாலை 1.30 மணி அளவில் அரங்கேறி உள்ளது எனவும் மேலும், அந்த சம்பவத்தில் ஈடு பட்ட அந்த குற்றவாளியை கைது செய்துள்ளதாகவும் அங்குள்ள போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிப்படைந்த அந்த பெண் கூறுகையில், “சம்பவம் நடந்த அன்று அதிகாலை நான் கடைசி ரயிலில்  மும்பையில் இருந்து வசாய் ஸ்டேஷனுக்கு வந்தடைந்தேன். அங்கிருந்து நான் துங்கரேஷ்வர் லேன் வழியாக நடந்து சென்று ஜிகோட் ஐவிஎஃப் மையத்தை அடைந்ததேன் அங்கு 25 முதல் 30 வயதுக்குட்பட்ட ஒரு நபர் என்னைப் பின்தொடர்ந்தார்.

அவர் திடீரென்று என் முன் வந்து என்னை பலாத்காரம் செய்ய போவதாக கூறினார். பின்னர் நான் கத்துவதைத் தடுக்க அவர் என் வாயில் கையை வைக்க முயன்றார். மேலும் என்னை தரையில் தள்ளிவிட்டு,  என்னை தகாத முறையில் தோட்டத்துடன் சில ஆபாசமான செய்கைகளையும் செய்தார். அப்போது எங்கிருந்தோ ஒரு தெருநாய் திடீரென குரைக்கத் தொடங்கியது. அப்போது, அவர் என் மீது வைத்திருந்த பிடியை விட்டார்.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி நான் அந்த நபரை உதைத்தேன். அதைத் தொடர்ந்து அவர் சம நிலையை இழந்தார், பின்னர் அவர் எனது ஐபோனைப் பறித்து விட்டு மீண்டும் என்னை பிடிக்க முயன்றார். ஆனால் நான் அவரை தள்ளிவிட்டு குருத்வாரா சாலையை நோக்கி ஓடி தப்பித்து விட்டேன்” என கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக பிஎஸ்ஐ ஹரிஷ் பாட்டீல் தலைமையிலான போலீசார் கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இச்சம்பவம் நடந்த இடத்தின் அருகில் இருந்த கடையின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம். ஆனால் இருள் காரணமாக பெரிதாக எதுவும் எடுக்க முடியவில்லை.

இறுதியாக, சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியான சந்தீப் கோட் என்பவரை கண்டுபிடித்து அவரைக் கைது செய்தோம். மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 392, 354, 354 (D) மற்றும் 506 இன் கீழ் நாங்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருக்கிறோம்” என்று கூறி உள்ளனர்.

Recent Posts

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

10 hours ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

12 hours ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

12 hours ago

சித்தா படித்த பட்டதாரிகளே… அரசாங்கத்தில் வேலை செய்ய ரெடியா?

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…

12 hours ago

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…

12 hours ago

இனி IITயில் இசை பட்டப்படிப்புகளை படிக்கலாம்.! எங்கு, எப்படி தெரியுமா.?

மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…

13 hours ago