ஸ்கெச் போட்டு காதலியின் கணவனை கொன்ற திருமண பரிசு.! முன்னாள் காதலன் அதிரடி கைது…

முன்னாள் காதலிக்கு திருமணப் பரிசாக ஹோம் தியேட்டருக்குள் வெடிகுண்டு வைத்து புது மாப்பிள்ளையைக் கொன்ற முன்னாள் காதலன் கைது.

சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் திருமண பரிசாக பெற்ற ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டம் திடீரென வெடித்துள்ளது. இந்த விபத்தில் புதிதாக திருமணமான ஒருவரும் அவரது மூத்த சகோதரரும் உயிரிழந்துள்ளனர். கபீர்தாம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி, 22 வயதான ஹேமேந்திரா மெராவி என்பவர் திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, அவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் அவரது வீட்டில் ஒரு அறைக்குள் திருமணப் பரிசுகளை பிரித்து பார்த்துக்கொண்டிருந்தன. அப்பொழுது, பரிசில் இருந்த ஹோம் தியேட்டர் சிஸ்டத்திற்கு மெராவி மின் இணைப்பு கொடுத்துள்ளார். மின் இணைப்பு கொடுத்ததும் திடீரென அந்த மியூசிக் சிஸ்டம் வெடித்துள்ளது. இந்த விபத்தில் மெராவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், அவரது சகோதரர் ராஜ்குமார் மற்றும் ஒன்றரை வயது சிறுவன் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தடயவியல் நிபுணர்களுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில், மெராவியின் சகோதரர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மேலும், இது குறித்து முதல் கட்ட விசாரணையில், வீட்டின் அறையை ஆய்வு செய்தபோது வெடி விபத்துக்கான எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை என்றும் மியூசிக் சிஸ்டம் மட்டுமே வெடித்ததுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வெடித்த ஹோம் தியேட்டர் மணப்பெண்ணின் முன்னாள் காதலன் கொடுத்த பரிசு என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில், ஹோம் தியேட்டர் அமைப்பினுள் யாரோ வெடிமருந்துகளை வைத்ததால் தான் வெடி விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது. பின்னர், திருமணத்தின் போது கிடைத்த பரிசுகளின் பட்டியலை போலீசார் விசாரிக்கத் தொடங்கியபோது, ​​ஹோம் தியேட்டர் மணமகளின் முன்னாள் காதலரின் பரிசு என்பதைக் கண்டுபிடித்தனர்.

பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் சர்ஜு என அடையாளம் காணப்பட்டு, இன்று அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்தவரிடம் விசாரணை நடத்தியபோது, குற்றம் சாட்டப்பட்டவர், தனது முன்னாள் காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதற்காக கோபத்தில், அவர் ஹோம் தியேட்டருக்குள் வெடி மருந்தை வைத்து பரிசாக கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.

Leave a Comment