in-rain tamil nadu

எச்சரிக்கை…சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு! சும்மாவே வெளுத்து வாங்குது!

By

சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

   
   

மழைக்கு வாய்ப்பு 

சென்னையில் நேற்று முதல் தற்போது வரை பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே வடபழனி, சைதாப்பேட்டை, திருமங்கலம், ஆலந்தூர்,அசோக்நகர், கிண்டி, கோயம்பேடு,அரும்பாக்கம், தி.நகர் அண்ணாநகர்,ஈக்காட்டுத்தாங்கல், உள்ளிட்ட பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு 

சென்னையில் கனமழை பெய்வதை போல தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் நாமக்கல், திருச்சி, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, தென்காசி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம்,தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி , கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஈரோடு,ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேர வானிலை 

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மீதமான வாய்ப்புகள் இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருக்கிறது.

Dinasuvadu Media @2023