தமிழகம் முழுவதும் இன்று ‘கிராம சபை’ கூட்டம்!

தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு இன்று (நவம்பர் 1) தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து ஊராட்சிகளிலும் இன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்த கூட்டங்களை மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்த கூடாது என்று கூறியுள்ளது. மேலும், கூட்டம் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்திற்கான செலவின வரம்பு, 5,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னிட்டு எடுத்துள்ள முன்னெச் சரிக்கை நடவடிக்கை குறித்து எடுத்துரைக்க வேண்டும். மேலும், இணைய வழி வீட்டு வரி மற்றும் சொத்து வரி செலுத்து செலுத்துதல் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த படத்தை பார்த்த யோகி ஆதித்யநாத்தால் அழுகையை அடக்க முடியவில்லை – கங்கனா ரனாவத் பதிவு!

எப்போதெல்லாம் கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான நாட்களில் நடைபெறுவது வழக்கம். இந்தியக் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி தினம் ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கிராம சபை  கூட்டப்படுகிறது.