11 நாள் தூங்காமல் வேலை! அந்த படத்திற்காக விஜயகாந்த் பட்ட கஷ்டம்?

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் சினிமா கேரியரில் மறக்க முடியாத திரைப்படங்களில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான  ‘கேப்டன் பிரபாகரன்’ . இயக்குனர் ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார்.

read more- விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை!

அந்த சமயம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் விஜயகாந்தின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்தது என்றே சொல்லலாம். ஆனால், இந்த படத்தில் பல ரிஸ்க் எடுக்கப்பட்டு இருந்ததாம்.

read more- தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த செயல்?

இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் சுப்பையா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இந்த படத்தில் எடுக்கப்பட்ட ரிஸ்க் எல்லாம் பல மணி நேரங்களாக நாம் பேசலாம் அந்த அளவிற்கு படத்தில் பல ரிஸ்க் எடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக படத்தில் ரயிலில் சண்டைபோடும் காட்சிகள் எல்லாம் வரும் அந்த காட்சிகள் எடுக்கும்போதெல்லாம் பலருக்கும் அடிபட்டு இருக்கிறது.

read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?

அதைப்போல, அந்த காட்சி எடுத்துமுடித்த பிறகு அன்று இரவே ஆட்டமா தேரோட்டமா பாடல் எடுக்க மட்டும் 11 நாட்கள் ஆனது. சண்டை காட்சிகள் முடிந்த பிறகு படத்தின் பாடல்கள் காட்சிகள் இரவு நேரத்தில் எடுக்கப்படும். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 1 மணி நேரம் தான் விஜயகாந்த் தூங்கினார்.  இப்படி தான் 11 நாட்கள் அவர் தூங்காமல் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டு இருந்தார்.

அதைப்போல படப்பிடிப்பு சமயத்தில் சில முறை விஜயகாந்திற்கு காயமும் ஏற்பட்டது” எனவும் தயாரிப்பாளர் சுப்பையா கூறியுள்ளார். இப்படியான ரிஸ்க் படத்தில் எடுத்திருந்தாலும் கூட அந்த அளவிற்கு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது.

Leave a Comment