கார் விரும்பிகளே எச்சரிக்கை… வாகனத் திருட்டுகள் அதிகரிப்பு.. இந்தியாவில் எந்த மாநிலம் முதலிடம் தெரியுமா?

Vehicle thefts : கார் விரும்பிங்கள் உங்கள் காரை எந்த அளவுக்கு விரும்புகிறீர்களோ, அந்த அளவுக்கு பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி பாதுகாப்பாக வைத்திருப்பதும் ரொம்ப ரொம்ப முக்கியம். அப்படி பாதுகாப்பான இடத்தில் நிறுத்தாவிட்டால், சில வினாடிகளிலேயே காணாமல் போகிவிடும், அதாவது திருடப்பட்டுவிடும்.

ஏனென்றால், இந்தியாவில் வாகனத் திருட்டுகள் 2023ம் ஆண்டில் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அக்கோ டிஜிட்டல் இன்சூரன்ஸின் ‘Theft & the City 2024’ அறிக்கையின்படி, தலைநகர் டெல்லியில் தான் இந்தியாவிலேயே அதிகபட்ச திருட்டுகள் நடந்துள்ளன.

Read More – இனி LLR எடுப்பது மிக சுலபம்… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு.!

இந்தியாவில் நடந்த 80 சதவீத பயணிகள் கார் திருட்டுகள் டெல்லியில் நடந்துள்ளது. இருப்பினும், தலைநகரின் ஒட்டுமொத்த வாகனத் திருட்டுப் பங்கு 2022-இல் 56 சதவீதம் இருந்த நிலையில், 2023ல் 37 சதவீதமாக குறைந்துள்ளது.  2023ம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் 105 வாகனத் திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு 14 நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருடப்படுகிறது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனிமேஷ் தாஸ் கூறியதாவது, இந்தியாவில் கொரானாவுக்கு பிறகு வாகன திருட்டு அதிகரித்துள்ளது.

Read More – AMOLED டிஸ்ப்ளே…108MP ரியர் கேமரா… மலிவு விலையில் அறிமுகமான POCO X6 Neo!

இதில், முதன்மையாக பார்க்கிங் சிக்கல்கள் காரணமாக திருட்டுகள் அதிகரித்துள்ளது. இந்த செயலை உணர்ந்து, காப்பீட்டு நிறுவனங்கள் இதுபோன்ற அபாயங்களை நிவர்த்தி செய்ய பல்வேறு செயல்முறைகளை மேம்படுத்தியுள்ளன. இதன் மூலம் பாலிசிதாரர்களுக்கு ஒரு பயன் கிடைக்கும்.

டெல்லியை தொடர்ந்து சென்னையில் வாகனத் திருட்டுகளின் பங்கு 5 சதவீதத்தில் இருந்து 10.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் 9 சதவீதத்திலிருந்து 10.2 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றுள்ளார். நாட்டில் திருடப்பட்ட கார்களில் 47 சதவீதம் மாருதி சுஸுகி கார்கள் என்றும் கூறப்படுகிறது. மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி ஸ்விஃப்ட் ஆகியவை டெல்லி என்சிஆர் பகுதியில் அடிக்கடி திருடப்படும் கார்களாகும்.

Read More – தெலுங்கானாவில் அதிரடி மாற்றம்… இனி “TS” இல்ல “TG” தான்!

அதற்கு அடுத்தபடியாக ஹூண்டாய் க்ரெட்டா, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் மாருதி ஸ்விஃப்ட் டிசையர் உள்ளன. மேலும், 2023ம் ஆண்டில், கார்களை விட பைக் திருட்டுகள் அதிகம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஆக்டிவா, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஹோண்டா டியோ மற்றும் ஹீரோ பேஷன் ஆகியவை இந்தியாவில் அதிகம் திருடப்பட்ட வாகனங்களாக உள்ளன.

Leave a Comment