AsiaCupFinal : இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 50 ரன்களில் சுருண்ட இலங்கை!

ஆசியக் கோப்பை 2023-யின் இறுதிப்போட்டி இன்று பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியும், இலங்கை கிரிக்கெட் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன்  தசுன் ஷானகா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிஸ்ஸங்க, குசல் பெரேரா அடுத்ததடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அடுத்ததாக களமிறங்கியுள்ள குசல் மெண்டிஸ் மட்டும் 15 ரன்களுக்கு மேல் அடித்து களத்தில் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தார்.  சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க இவர்கள் இருவரும் வந்த வேகத்தில் டக்-அவுட் ஆகி திரும்ப அதன் பிறகு தனஞ்சய டி சில்வா 4 ரன்களுக்கு வெளியேறினார்.

அவருக்கு அடுத்ததாக வந்த கேப்டன் தசுன் ஷானகா ஒரு ரன்கூட அடிக்காமல் வந்த வேகத்திற்கு வெளியேற, இதனால் இலங்கை அணி 5 ஓவர்கள் முடிவிலேயே 6 விக்கெட்களை இழந்து 12 ரன்கள் மட்டுமே எடுத்து. பொறுமையாக விளையாடி குசல் மெண்டிஸ் அடுத்ததாக  17 ரன்களுக்கு அட்டமிழந்து  வெளியேறினார்.

அவருக்கு அடுத்ததாக துனித் வெல்லலகே 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன் பிறகு மாசு ஹேமந்த் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்,  களத்திற்கு வந்த பிரமோத் மதுஷன், மதிஷ் பத்திரன இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி 15.2 ஓவரிலிலே தங்களுடைய அணைத்து விக்கெட்களையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்து.

இந்திய அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக முகமது சிராஜ் 7 ஓவர்கள் பந்து வீசி 6 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். ஹர்திக் பாண்டியா 2.2 ஓவர்கள் பந்து வீசி 3 விக்கெட்களும் பும்ரா 5 ஓவர்கள் பந்துவீசி 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். அடுத்ததாக 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.