தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விவகாரம் : ரூ.10 லட்சம் நிவாரணத்தை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

கள்ளக்குறிச்சி : மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 38 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல் தமிழகத்தையே அதிர்ச்சியில்  ஆழ்த்தி இருக்கும் நிலையில், பலர் கள்ளக்குறிச்சிக்கு நேரில் வந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.  ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கள்ளக்குறிச்சி வந்து அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் மேலும் மருத்துவமனையில் இருப்பவர்களையும் நேரில் சந்தித்து அவர்களுடைய நலம் பற்றியும் விசாரித்தனர். அவர்களை தொடர்ந்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஷச்சாராயம் அருந்தி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய நலம் விசாரித்தார்.

அதனை தொடர்ந்து, விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின்
உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவிட்டு அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அத்துடன், இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.  அந்த நிவாரண தொகைக்கான காசோலையையும், அஞ்சலி செலுத்துவிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கினார்.

Recent Posts

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

5 hours ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

6 hours ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

6 hours ago

சித்தா படித்த பட்டதாரிகளே… அரசாங்கத்தில் வேலை செய்ய ரெடியா?

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…

6 hours ago

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…

6 hours ago

இனி IITயில் இசை பட்டப்படிப்புகளை படிக்கலாம்.! எங்கு, எப்படி தெரியுமா.?

மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…

7 hours ago